தாங்க முடியாத முதுகு வலி..! ஹாஸ்பிடல் சென்ற இளம் பெண்..! உள்ளே இருந்த பொருளை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

தீராத முதுகுவலியால் மருத்துவமனைக்கு வந்த இளம் பெண்ணின் முதுகுப்பகுதியில் துப்பாக்கி குண்டு இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஹைதராபாத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் அஸ்மா பேகம்,இவர் தீராத முதுகு வலியால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களிடம் தனக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக முதுகுவலி இருந்து வருவதாகவும் அதற்காக பல மருந்துகளை சாப்பிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நோயின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவர்கள் அவரது முதுகு பகுதியை ஸ்கேன் செய்யும் படி அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் மருத்துவரிடம் கொண்டு சென்று காண்பித்தபோது மருத்துவர் அவரது முதுகுப்பகுதியில் ஒரு துப்பாக்கி குண்டு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவரிடம் கேட்டபோது அதற்கு அவரிடம் எந்த ஒரு பதிலும் இல்லை என தெரிவித்துள்ளார். தனது முதுகுப் பகுதியில் இந்த துப்பாக்கி கொண்டு எப்படி வந்தது என்பது எனக்கே தெரியாது எனவும் அஸ்மா தெரிவித்துள்ளார். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்து துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அஸ்மாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவரது உடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே மேலும் விவரங்கள் தெரியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.