மருந்து கம்பெனிகளுக்காக டாக்டர்கள் செய்யும் விபரீதம்! சோதனை எலிகளாகும் ஏழைக் குழைந்தைகள்! பிரபல மருத்துவமனை மீது பகீர் புகார்!

ஐதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததன் பேரில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தெலுங்கானா மாநில அரசுக்குச் சொந்தமான நிலோஃபர் ஹாஸ்பிடல், ஐதராபாத்தில் உள்ள முக்கியமான மருத்துவமனையாகும். இந்த மருத்தவமனையில் பணிபுரியும் சில டாக்டர்கள், தனியார் மருந்து விற்பனை நிறுவனங்களுடன் ரகசிய உடன்பாடு செய்துகொண்டு, அவர்கள் தயாரிக்கும் புதிய மருந்துகளை விதிமுறைகளுக்கு மாறாக, ரகசியமான முறையில், நோயாளிகளிடம் பரிசோதிப்பதாக, புகார் எழுந்துள்ளது.

சமீப காலமாக, அடிக்கடி பிரசவத்திற்காக இங்கு அனுமதிக்கப்படும் பெண்கள், பிறக்கும் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாக உள்ளது. இதையடுத்து, அங்கு அதிரடியாக விசாரணை நடத்தும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்பேரில் குழந்தைகள் நல தலைமை மருத்துவர் ரவிக்குமார் தலைமையில் அதிரடி சோதனை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.  இதற்கிடையே, முன் அறிவிப்பின்றி, இத்தகைய சோதனை நடத்தப்படுவதாக, மருத்துவமனை நிர்வாகி லாலு பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.