ஹெச்எம் என்ன ரேப் பண்ணுவார்..! அதன் பிறகு அவரது மனைவி..! பள்ளி மாணவி வெளியிட்ட பகீர் தகவல்!

ஐதராபாத்: பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தலைமை ஆசிரியர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஐதராபாத், படாசிங்காரம் பகுதியில் ஜானெட் ஜார்ஜ் மெமோரியல் ரெசிடன்ஷியல் ஸ்கூல்  செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பிரசாத் ராவ் (51). இவரது மனைவி சாரதி, அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இங்கு, கடந்த 2015ம் ஆண்டு 15 வயது சிறுமி ஒருவர் சேர்ந்துள்ளார்.

ஹாஸ்டல் வசதியுடன் கூடிய பள்ளி என்பதால், அந்த மாணவி ஹாஸ்டலில் சேர்ந்து படித்து வந்திருக்கிறார். ஒருநாள், அவரது ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்த தலைமை ஆசிரியர் பிரசாத் ராவ், அவரை பலாத்காரம் செய்திருக்கிறார். பிறகு, அடிக்கடி அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.  

பிரசாத் ராவ் பாலியல் ரீதியாக தொல்லை தர, அதேசமயம், அவரது மனைவி சாரதி, அந்த மாணவியை மிரட்டி, தனது வீட்டு வேலைகளைச் செய்யும்படி பயன்படுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்தால், மாணவியை இருவரும் சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். இவர் ஒருவர் மட்டுமல்ல, இதுபோன்ற பல மாணவிகளை கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து சீரழித்துள்ளனர்.

இதன்பேரில், பாதிக்கப்பட்ட மாணவி, சிறார் மீட்பு உதவிக்குழுவிற்கு புகார் அளித்தார். அவர்கள் போலீசிற்கு தகவல் தர, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், கணவன், மனைவியை கைது செய்துள்ளனர்.