தனக்கு தானே சமாதி! பள்ளம் தோண்டி உள்ளே இறங்கிய விவசாயி! அதிர வைக்கும் காரணம்!

ஐதராபாத்: நிலத்தின் ஆவணம் கிடைக்காத விரக்தியில், விவசாயி ஒருவர் தன்னைத்தானே குழி தோண்டி புதைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கானா மாநிலம், மஹபுபாத் மாவட்டத்தில் உள்ள நரசிம்முலுபேட்  பகுதியை சேர்ந்தவர் மேகா பிரபாகர் ரெட்டி. இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது. 3 பேரும் 2001ம் ஆண்டு தங்களுக்குச் சொந்தமான நிலத்தை பாகப் பிரிவினை செய்துகொண்டனர்.

இதில், மற்ற சகோதரர்கள், விவசாயம் செய்வதை கைவிட்ட நிலையில், மேகா பிரபாகர் மட்டும் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான 5.26 ஏக்கர் நிலத்திற்கு ஏற்கனவே பட்டா உள்ள நிலையில், பாஸ்புக் வழக்க தாசில்தார் மறுத்துவிட்டாராம். இதற்கு உள்ளூர் எம்எல்ஏ பரிந்துரைக்க வேண்டும் என, தாசில்தார் சொன்ன நிலையில், அந்த எம்எல்ஏ பிரபாகர் ரெட்டியுடன் கருத்து மோதல் ஏற்படுத்திக் கொண்டுவிட்டாராம்.  

இதனால் அதிருப்தி அடைந்த பிரபாகர், தனது நிலத்தில் குழி தோண்டி தன்னை புதைப்பது போன்ற முயற்சியில் ஈடுபட்டார். பிறகு அரசு அதிகாரிகள் வந்து, அவரை மீட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.