போராட்டக் களத்தில் பெண் மருத்துவர்கள்! தவறாக நடந்து கொண்ட ஆண் போலீஸ்! வைரல் புகைப்படம்!

ஹைதராபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் போலீசார் அத்துமீறி தொடக்கூடாத இடங்களை தொட்டதாக புகார் எழுந்துள்ளது.


சார்மினார் பகுதியில் உள்ள அரசு நிஜாமியா மருத்துவமனையில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவமனையின் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அந்த மருத்துவமனையை எரவாடா என்ற இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் பெண் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்த நிலையில் அவர்கள் கலைந்து செல்லாததால் அவர்கள் குண்டுகட்டாக அப்புறப்படுத்தப்பட்டனர். பெண் மருத்துவர்களை பெண் போலீசார் தான் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு மாறாக பெண் போலீசாருடன் ஆண் போலீசாரும் அப்புறப்படுத்தினர்.

அவர்களின் பரமேஷ் என்ற போலீஸ்காரர் ஒரு பெண் மருத்துவரை வளைத்து பிடித்து தொடக்கூடாத இடங்களில் தொட்டு இழுத்து தள்ளியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய போலீஸ்காரர் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில் அந்த சம்பவம் உள்நோக்கத்துடன் நடைபெற்றதா அல்லது உள் நோக்கம் இன்றி இயல்பாக நடைபெற்றதா என விசாரணை நடத்தப்படும் என ஹைதராபாத் டிசிபி அம்பர் கிஷோர் ஜா தெரிவித்துள்ளார் தொடர்புடைய வீடியோவில் உள்ள காட்சிகள் தவறான கோணத்தில் எடுக்கப்பட்டு தவறாக சித்தரிக்கப்படும் வகையில் உள்ளதாகவும், அதை யாரும் பகிர வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளளார்.