ஒரே நேரத்தில் 150 நாய்களுக்கு விஷம்! துடிக்கத் துடிக்க உயிரோடு புதைக்கப்பட்ட பயங்கரம்! அதிர வைக்கும் காரணம்!

ஐதராபாத்: 150 நாய்களை ஐதராபாத் கார்ப்பரேஷன் நிர்வாகம், விஷம் போட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஐதராபாத் முழுவதும் உள்ள தெருநாய்களை விஷம் கொடுத்து கொன்று, அப்புறப்படுத்த, கார்ப்பரேஷன் சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பேரில் 150 நாய்களை ஒரே நேரத்தில் விஷம் போட்டுக் கொன்று, லாரியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. விலங்கு நல ஆர்வலர்கள், இதனை கண்டித்துள்ளனர். அதேசமயம், ஜெய்ப்பூர் காலனி, எல்பி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தெருநாய்களை பாதுகாக்க, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாய்களை வேண்டுமென்றே கொன்றுவிட்டு, சரியாக அடக்கம் செய்யாமல் ஐதராபாத் கார்ப்பரேஷன் நிர்வாகம் பொறுப்பின்றி நடந்துகொள்வதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.