கிறிஸ்தவ மத போதகர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிதி உதவி! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர்! கொதிக்கும் பாஜக!

ஐதராபாத்: ஆந்திராவில் உள்ள கிறிஸ்தவ மதப் போதகர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 வழங்குவதாக, ஜெகன் மோகன் அரசு அறிவித்துள்ளார்.


 இந்துவாக இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் கட்சி தற்போது ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் நலனை காக்க ஜெகன் மோகன் அரசு அதிக அக்கறை செலுத்துவதாக, ஒருசாரார் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.

இதற்கேற்ப, ஆந்திரா முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதப் போதகர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.5000 மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநில சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்டமாக, ஆந்திரா முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதப் போதகர்களை கணக்கெடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  

எனினும், ஜெகன் மோகன் ரெட்டி அரசின் செயல்பாடு, பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை அவமதிப்பதாகவும், அதேசமயம் பிற  சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்குவதாக உள்ளதென்று, பலரும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.