நண்பர்கள் 11 பேருடன் ஆற்றுக்குள் பாய்ந்த கார்..! கல்யான வீட்டிற்கு புறப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில் நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 11 பேர் அங்குள்ள சூர்யா பேட்டையில் நண்பர் ஒருவரின் திருமணத்திற்குச் சென்றுள்ளனர். பிறகு, 2 கார்களில் வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒரு கார், சுக்கிரலா என்ற பகுதியில் வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள நாகார்ஜூனா சாகர் நீர்க்கால்வாயில் விழுந்தது. 

கால்வாயில் நீர் வரத்து அதிகமாக இருக்கவே, இதுபற்றி போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் காரை மீட்க முடியவில்லை. அதற்குள் கார் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த காரில் 6 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் சடலம் கிடைக்குமா என, தொடர்ந்து தேடிவருகின்றனர்.  

நண்பர்களின் கண் முன்னேயே சக நண்பர்கள் காருடன் கால்வாயில் விழுந்த மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.