டாக்டர் மனைவியுடன் தாம்பத்ய உறவு! வீடியோ எடுத்த என்ஜினியர் கணவன்! கண்டுபிடித்த குடும்பத்தார்! பிறகு அரங்கேறிய விபரீதம்!

மனைவியுடன் தாம்பத்ய உறவு கொண்டதை வீடியோ எடுத்து மனைவியையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர்  ஷ்யாமளா. தனியார் மருத்துவமனையில் கண் டாக்டராக வேலை பார்த்து வந்த ஷ்யாமளாவுக்கும்  ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சத்திய நாராயணா என்ற பொறியாளருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

இருவரும் சித்தூரிலுள்ள சத்தியநாராயணன் வீட்டில் வசித்து வந்த நிலையில் சத்தியநாராயணா தனது மனைவியுடன் தாம்பத்ய உறவு கொண்டதை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து அதனை அவ்வப்போது பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.

இதனை ஒருநாள் பார்த்துவிட்ட ஷ்யாமளா அதிர்ச்சியடைந்தார். அவர் அந்த வீடியோவை அழிக்க வலியுறுத்தியதையடுத்து இருவருக்கும் பிரச்சினை தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா மனைவியை தரக்குறைவாக பேசியதோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பெண் டாக்டர் ஷ்யாமளா தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் சத்தியநாராயணாவுக்கு அறிவுரை கூறினர். நடந்தவற்றை மறந்து தகராறு செய்யாமல் குடும்பம் நடத்துமாறும் இல்லையெனில் வரதட்சனையாக கொடுத்த 75 பவுன் நகை, சீர்வரிசை பொருட்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஆனால் சத்தியநாராயணா எதையும் திருப்பி தர முடியாது என்றும் மேலும் ரூ.10 லட்சம் கொடுத்தால் மட்டுமே குடும்பம் நடத்தமுடியும் என்றும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இல்லையெனில் வீடியோவை இணையதளத்தில் வெளியிடப் போவதாக அந்த நபர் மிரட்டியதை அடுத்து ஷ்யாமளா ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சத்தியநாராயாணா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.