காதலிச்சோம்! கல்யாணம் பண்ணுனோம்! இப்போ என் நடத்தை சரியில்லங்றார்! அதனால்..! இளம் மனைவி செய்த காரியம்!

சென்னையில், மனைவின் நடத்தை சரியில்லை என்று கூறி வீட்டில் பூட்டி வைத்து கொடுமைப்படுத்திய கணவனை தண்டிபதற்காக மனைவி எடுத்த அதிரடி முடிவால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். துணிக்கடையில் வேலை பார்க்கும் இவர், புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவரைக் காதலித்து வந்துள்ளார். காதலை தொடர்ந்து இருவருக்கும் திருமணம் முடிந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்த சில ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2017ம் ஆண்டு இருவரும் தனிக் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரமேஸ்வரி, கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் கணவன், மனைவின் வீட்டிற்கு சென்று பரமேஸ்வரியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்ததுள்ளார். 

வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில், கிருஷ்ண பிரசாத் உனது நடத்தை சரி இல்லை, உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளான். இதைக் கேட்டு பரமேஸ்வரி மிகவும் அதிர்ந்து போனாள். இது தொடர்பாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் இருவரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த ஒரு பேச்சுவார்த்தை க்கும் அவர்கள் இருவரும் உடன்படவில்லை.

இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பரமேஸ்வரி, கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருவொற்றியூர் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். காவல்துறையினர் கணவர்-மனைவி இருவரையும் அழைத்து மறுபடியும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்பு இருவரும் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கிய நிலையில், சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் பரமேஸ்வரியை வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு கணவர் மற்றும் குடும்பத்தார் அனைவரும் கேரளா சென்றுவிட்டனர். இந்த சூழ்நிலையில், 3 நாட்கள் உணவு, குடிநீர் இன்றி தவித்த பரமேஸ்வரி, முதல் மாடி வழியாகக் கீழே குதித்து உயிர் தப்பினார். இதில் அவளுக்கு காயம் ஏற்பட்டது. மாற்று உடைகள் கூட இல்லமால் தவித்தாள் அந்த மூன்று நாட்களும். வீட்டை விட்டு தப்பித்த பரமேஸ்வரி தன்னந்தனியாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், கணவன் மற்றும் அவர் குடும்பத்தார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தர்ணாவில் இடுப்பட்டார். இந்நிலையில், கணவர் வீட்டின் முன்பு மனைவி அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பரமேஸ்வரியிடம் சமாதானம் பேசினர். சுமார் 4 மணி நேரத்துக்குப் பிறகு அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது நடந்த விசாரணையில், பரமேஸ்வரி நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்கக் கூறினார். கணவரும், அவரது குடும்பத்தாரும் கொடுமைப்படுத்தியாதால் மன உளைச்சல் ஏற்பட்டது அதன் காரணாகவே தர்ணா போராட்டம் நடத்தியதாக கூறினாள். பரமேஸ்வரியின் இந்த அதிரடி முடிவால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.