மனைவிக்கு தகாத உறவு! தட்டிக்கேட்டேன்! தர்ம அடி விழுகிறது! விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

கன்னியாகுமரி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தன்னை கொல்ல முயற்சித்த மனைவியை கண்டித்து கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேல்புத்தேரி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. பஞ்சர் வேலை செய்து வரும் இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் செல்வி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், செல்வி அப்பகுதீயை சேர்ந்த வேல்முருகன் என்பவருடன் தகாத உறவு கொண்டிருக்கிறார்.

இதன்பேரில், செல்வி வீட்டை விட்டுச் சென்று, வேல்முருகனுடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறாராம். இதுபற்றி கண்டனம் தெரிவித்த மாரிமுத்து, செல்வியை மீண்டும் வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால், அவரது மனைவியும், கள்ளக்காதலனும் சேர்ந்து மாரிமுத்துவை அடித்து, உதைத்துள்ளனர். இதுபற்றி மாரிமுத்து போலீசில் புகார் செய்திருந்தாலும், அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாரிமுத்து, நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தனது தாயுடன் நேற்று (ஆகஸ்ட் 13) வந்தார். அப்போது கையில் வைத்திருந்த டீசலை தலையில் ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார். பின்னர் போலீசார் அவரை காப்பாற்றினர். அவரிடம் தற்போது விரிவான விசாரணை நடத்தி வருவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.