குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி..! இல்லற வாழ்வு கிடைக்காத சோகத்தில் கணவன் எடுத்த பகீர் முடிவு!

ஈரோடு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.


  ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த நல்லகவுண்டன்பாளையத்தில் சவுந்தர், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். 

இந் நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த சண்டையில் ஆத்திரம் அடைந்த மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதை அடுத்து பலமுறை மனைவியிடம் சமரசம் செய்ய முயன்றார் சவுந்தர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 2 தினங்களாக மன வேதனையில் காணப்பட்டார் சவுந்தர். மனைவியும் பிரிந்து சென்ற நிலையில் குழந்தைகளும் தாயின் அரவணைப்பு இல்லாமல் இருக்கிறதே என ஏங்கினார்.

இந்நிலையில் முந்தைய நாள் இரவில் சவுந்தர் தனது வீட்டில் சேலையால் கட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலையில் வெகு நேரமாகியும் சவுந்தர் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் சவுந்தர் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று சவுந்தர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேவையில்லாமல் அடிக்கடி கோவப்பட்டதால் மனைவி கணவரை இழந்துள்ளார். குழந்தைகள் தந்தையை இழந்துள்ளது.