என் கணவன் கூட உனக்கு தனிமையில் என்னடி வேலை? ராதிகா கேட்ட கேள்வி..! பிறகு லதா எடுத்த பகீர் முடிவு!

கள்ளக்காதலனின் குடும்பத்தார் அவமானப்படுத்தியால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையத்தில் பின்னாலடை நிறுவன தொழிலாளி மனோகரன், லதா தம்பதி வசித்து வந்தனர். 6 ஆண்டுகளுக்கு முன்னர்தான் இருவருக்கும் திருமணம் ஆனது. இதற்கிடையே இருவருக்கும் அடிக்க தகராறு ஏற்பட லதா கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.

லதாவுக்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் பரமசிவன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தாக கூறப்படுகிறது. இந்த விஷயம் பரமசிவன் மனைவி ராதிகாவுக்கு தெரியவர குடும்பத்துடன் வந்து லதாவை அவமானப்படுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.  

இதனால் மனமுடைந்த லதா கடந்த வாரம் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லதாவின் மரணம் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் யார் காரணம் என தெரியாமல் இருந்தது. இதற்கிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லதா, பரமசிவன் என்பவருடன் பழகி வந்ததும் அதை அவரின் மனைவியும் குடும்பத்தாரும் கண்டித்து அவமானப்படுத்தியதும் தெரியவந்தது.

இதனால் மனமுடைந்து லதா தற்கொலை செய்து கொண்டதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ராதிகா உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து 5 பேரும் தலைமறைவாகிவிட்டனர். சின்னச் சின்னத் தகராறுக்கெல்லாம் கணவனை விட்டு பிரிந்து முறையற்ற வாழ்வை தேடும் பெண்களுக்கு மரணம் மட்டுமே பரிசாக கிடைத்துவிடுகிறது.