தொலைபேசியில் தலாக் சொன்ன கணவன்! போலீஸுக்குப் போன பெண்ணின் மூக்கை அறுத்த கொடூரம் . உ.பி. அதிர்ச்சி

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தொலைபேசி மூலம் முத்தலாக் கூரிய கணவன்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டார் அப்பெண்ணை அடித்து உதைத்து மூக்கை அறுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முத்தலாக் சட்டத்தின் தடை ஆணை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான சில ஆண்டுகளிலேயே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இருவரும் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முத்தலாக் தெரிவித்துள்ளார். இதையடுத்து உன்னை விவாகரத்து செய்து விட்டதாகவும் தொலைபேசியில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் உடனே காவல் துறையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வீட்டாரை அழைத்து காவல் நிலையத்தில் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. மற்றும் முத்தலக் கூறிய குற்றத்திற்காக அப்பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த கணவர் வீட்டார் வீட்டிற்கு சென்றதும் அப்ப என்னை அடித்து உதைத்து உள்ளனர்.

இந்நிலையில் அப்பெண்ணின் தாயாரையும் கணவரின் வீட்டார் கடுமையாக தாக்கியுள்ளனர். நிலையில் இருரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.