மனைவியின் தங்கையை, தன்னுடைய தங்கை போல் பாவிக்க வேண்டியவர் அவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது அந்தப் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
அக்கா கணவருடன் நெருங்கிப் பழகிய தங்கை! திடீர் உடல்நலக்குறைவு! ஹாஸ்பிடலில் டாக்டர்கள் கூறிய அதிர்சசி தகவல்!
சேலம் மாவட்டம் குருவாளியூர் பகுதியைச் சேர்ந்த மணி, கலா தம்பதிக்கு பிரியா, சீதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 2 வருடங்களுக்கு முன்னர் மூத்த மகள் பிரியாவை பள்ளியில் படிக்கும்போது தாராபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான மணி என்பவர் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து பிரியாவும் மணியியும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்நிலையில் +2 படித்து வந்த பிரியாவின் தங்கை சீதாவையும் ஆசை வார்த்தை கூறி தன் ஆசைக்கு இணங்க வைத்து பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் மணி. இந்த விஷயத்தை சீதாவும் வீட்டில் சொல்லாமல் மறைத்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் தனிமையில் இருந்ததற்கு அடையாளம் வெளிப்படும் வகையில் சீதா வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயம் அனைவருக்கும் தெரியவந்தது. தற்போது சீதா 5 மாத கருவை தன்னுடைய கர்ப்பப்பையில் சுமந்து வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீதாவின் பெற்றோர் மருமகன் மணி மீது போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து தலைமறைவான மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் அவரை தேடிப் பிடித்து கைது செய்து சிறையிலடைத்தனர்.