காதல் மனைவியின் தங்கையுடன் தகாத உறவு! மச்சினிச்சியை கர்ப்பமாக்கிய பலே இளைஞன்!

கன்னியாகுமரி அருகே திருமணமாகிய அக்காவை பார்க்க வீட்டுக்கு வந்து சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கன்னியாகுமரி மாவட்டம் : குருந்தன்கோடு, இந்திரா காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27) கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.அய்யப்பனுக்கு காதல் திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில் திருமணம் ஆன தனது அக்காவை பார்க்க அடிக்கடி அவரது தங்கையா 16வயது சிறுமி வீட்டிற்க்கு வந்து போக  இருந்திருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக  சிறுமி, அக்கா வீட்டிற்கு வருவதில்லை காரணம் கேட்ட போதும் சொல்லவில்லை .இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி  அனுமதிக்க பட்டிருக்கிறார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை  பெற்றோரிடம் கூறியதும், அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறுமியை யாரும் பாலியல் பலாத்காரம் செய்தனரா என சந்தேகித்த பெற்றோர்  குளச்சல் அனைத்து மகளிர் போலீசிலும் புகார் செய்தனர். இது குறித்த போலீசார்  விசாரணையில் சிறுமியின் அக்கா கணவர் அய்யப்பன் தான் பலாத்காரம் செய்தது உறுதியானது.

இதையடுத்து  அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இரணியலை அடுத்த ஆளூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நெல்லை மாவட்டம் பணக்குடியில் இருந்து ஒரு குடும்பத்தினர் விடுமுறைக்கு வந்த போது அருகில் உள்ள கடைக்கு சென்ற 9 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த வாலிபரும் கைது செய்ய்பட்டது குறிப்பிடதக்கது