கட்டிய மனைவி வாயில் ஆசிட் ஊற்றிய கொடூர கணவன்! அதிர வைக்கும் காரணம்!

கொல்கத்தாவில் ஒரு பெண் திரினாமூல் காங்கிரசுக்கு வாக்களிக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவரது கணவன் அவரை சரமாரியாகத் தாக்கியதோடு வாயில் ஆசிட்டையும் ஊற்றிய நிலையில் கவலைக்கிடமான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவன் திரினாமூல் காங்கிரஸ் ஆதரவாளர். அவன் தன் மனைவி அன்சூரா பீவியை திரினாமூல் காங்கிரசுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்தி வந்த நிலையில் அவர் மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

ஆனால் தொடர்ந்து அடம் பிடித்து வந்த அவன் தனது மனைவி தனது நிலையில் உறுதியாக இருந்ததால் ஆத்திரம் அடைந்தான். ஒரு கட்டத்தில் தனது மனைவியை சரமாரியாக தாக்கிய அவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றியதையடுத்து அவர் வலியால் துடிதுடித்தார். 

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ல அன்சுரா பீவியின் நிலை குறித்து 48 மணி நேரத்துக்குப் பிறகுதான் எதுவும் கூற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே தனது தாயை தனது தந்தை முடியைப் பிடித்து இழுத்து அடித்ததோடு வாயில் ஆசிட்டை ஊற்றியதாக அன்சூரா பீவியின் மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.