கணவன் கேட்ட ஒரே ஒரு கேள்வி! 2 வயது மகனுடன் 7வது மாடியில் இருந்து குதித்து இளம் மனைவி!

பெங்களூரு: கணவரின் தொல்லை தாங்க முடியாத பெண், 2 வயது மகனுடன் மாடியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவின் ஆர்டி நகர் பகுதியில் உள்ளது தின்னுர் மெயின் ரோடு. இங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றின் 7வது மாடியில் வசித்த பாவனா என்ற பெண், ஜூலை 2ம் தேதி தனது 2 வயது மகனுடன் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்தார்.

இதில், 2 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். அந்த பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எனினும், உயிரிழக்கும் முன்பாக, இவ்வாறு மாடியில் இருந்து கீழே குதித்ததற்கு, தனது கணவர் அரிஹந்த் காரணம் என்று, அந்த பெண் போலீசில் கூறியிருக்கிறார். நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் கேள்வி கேட்டு டார்ச்சர் செய்ததாக கூறியுள்ளார். இதன்பேரில், வழக்குப் பதிந்த போலீசார், பாவனாவின் கணவர் அரிஹந்தை கைது செய்துள்ளனர்.

அரிஹந்த் மட்டுமின்றி, அவரது சகோதரர்கள், பெற்றோர் என அனைவருமே தங்களது மகளை கொடுமைப்படுத்தி வந்தனர் என்றும், ஒருகட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் அவள் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் எனவும், பாவனாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.