கட்டி வைத்து கதற கதற தாக்கப்பட்ட கணவன் பலி! வேதனையில் இளம் மனைவி எடுத்த ஆவேச முடிவு!

திருடன் என தவறாக நினைத்து சில மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொல்லப்பட்டவரின் மனைவி, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யவில்லை என்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என சபதம் ஏற்றுள்ள சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வசித்து வந்த அன்சாரி என்பவர் தனது நண்பர்களுடன் கடந்த ஜூன் மாதம் சென்று கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தை திருடிவிட்டார் என ஒரு கும்பல் அவரை மரத்தில் கட்டி வைத்து சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அடித்து சித்திரவதை செய்த காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக இருந்தது. 

மேலும் இவர் முஸ்லிம் என்பதால் ஸ்ரீராமஜெயம் என கூறச்சொல்லி துன்புறுத்தபட்டதும் காணொளியில் பதிவாகியிருந்தது. இவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அங்கு சிகிச்சை பலனின்றி அன்சாரி உயிர் இழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

இந்நிலையில் அன்சாரி இருசக்கர வாகனத்தை திருடவில்லை என அவரது குடும்பத்தினர் தொடர்ந்து ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இதனால் வீடியோவில் அன்சாரியை துன்புறுத்திய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது. இவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. இதனால் அன்சாரியின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அன்சாரியின் மனைவி பர்வீன் கூறுகையில், என் கணவர் குற்றம் செய்யவில்லை. இதற்கான ஆதாரம் உலகுக்கே தெரியும். கைது செய்தவர்களை கொலை குற்றத்தில் பதிவு செய்து தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லையேல் நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன். 

நீதி மறுக்கப்பட்டு குற்றவாளிகளை காப்பாற்ற தொடர்ந்து பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது. எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் என்னுடைய சபதத்தை விரைவில் நிறைவேற்றுவேன் என்றார்.