மனைவி இறந்து 3 நாட்கள்! இறுதிச்சடங்கு செய்யவிடாமல் தடுத்த கிராமம்! தவித்த கணவன்! அதிர வைக்கும் காரணம்!

ஒடிசா மாநிலத்தில் தனது திருமணத்தின்போது வரதட்சணை கொடுக்காததால் இறந்த மனைவியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய விடாமல் மூன்று நாட்கள் அவரது கணவர் தடுத்துள்ளார். பின்னர் போலீசாரின் உதவியுடன் அப்பெண்ணிற்கு இறுதி சடங்கு நடத்தப்பட்டது.இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் குச்செய், இவருக்கும் அவரின் உறவினர் பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இந்நிலையில் அவர்களின் வழக்கப்படி திருமணத்தின் போது வரதட்சணையாக 2 மாடுகள் மற்றும் 1 ஆடு மற்றும் 3 புடவைகள் வழங்குவது வழக்கம் இந்நிலையில் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் போதிய அளவு பணமில்லாத காரணத்தினால் வரதட்சனையை திருமணம் முடித்த சில நாட்களில் தருவதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் அதை ஏற்றுக்கொண்ட மணமகன் வீட்டார் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு திருமணம் முடித்தனர். இந்நிலையில் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவி எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் இறுதிச் சடங்கின் போது அவரது கணவர் குச்செய் மனைவியின் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய விடாமல் மூன்று நாட்களாக தடுத்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து அப்பெண்ணின் கணவரை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் உதவியுடன் அப்பெண்ணிற்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மனைவி இறந்த பிறகும் வரதட்சனை கேட்டு அவரது உடலை எடுக்கவிடாமல் தடுத்த அப்பெண்ணின் கணவரின் இந்தச் செயலால் பொதுமக்கள் அனைவரும் குச்செய் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.