22 வயது நஸியா நடத்தையில் சந்தேகம்! 25 வயது கணவன் அரங்கேற்றிய கொடூரம்!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சரமாரியாக குத்திக் கொன்ற கணவனை அக்கம்பக்கத்தினர் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


25 வயதான சபீலம் அப்து கஃபார் அன்சாரி, 22 வயதான தனது மனைவி நஸியாவின் நடத்தையில் சந்தேகமுற்றும் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையேயான வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அன்சாரி, நஸியாவை சரமாரியாக கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் துடிதுடித்து சாய்ந்த நஸியாவுக்கு என்ன நேர்ந்ததோ என்ற பதற்றத்தில் அங்கிருந்த அவரது  தாய் ஓடி வந்து பார்த்த போது அன்சாரி அவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் நஸியாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் நசியாவின் உடலில் 6 இடங்களில் ஆழமான காயம் இருந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அனசாரியை சரமாரியாகத் தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
அதே போன்று தானேவைச் சேர்ந்த 25 வயது சகோதரர்களான சந்திரப் பிரசாத் கவுட், குந்தன் பிரசாத் கவுட் ஆகியோருக்கு தங்கள் சகோதரியை அப்பா பாட்டில் என்ற 21 வயது நபர் காதலித்தது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று அப்பா பாட்டீலை அழைத்து மிரட்டிய இருவரும் தங்களது சகோதரியை சந்திப்பதை தவிர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை ச்ந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பாபட்டீல் அதே நாளில்மரம் ஒன்றில் தூக்கிட்டுக்கொண்டு தொங்கினார். இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக கவுட் சகோதரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.