கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க ஊதாரி கணவன் செய்த விபரீத செயல்! அதிர்ந்த பெற்றோர்!

தூத்துக்குடியில் சரியாக வேலைக்கு போகாமல் இருந்த கணவனுடன் தகராறு ஏற்பட்டதில் கர்ப்பமாக இருந்த மனைவியை கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.


தூத்துக்குடியில் சந்திர கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியை சார்ந்த சண்முகப்பிரியாக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் ஆன நிலையில் சண்முகப்பிரியா கர்ப்பமாக இருந்துள்ளார்.

கணவர் மாரியப்பன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அடிக்கடி  இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்படும். இந்த நிலையில் நேற்று இரவில் தகராறு முற்றியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் மனைவி சண்முகப்பிரியாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

காலையில் விடிந்தும் கதவை திறக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த மாரிப்பனின் சகோதரி கதவை உடைத்துப் பார்த்தபோது இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் மயக்கத்தில் இருந்த மாரியப்பனை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இது குறித்த தகவல் அடுத்து போலீசார் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மாரிப்பன் தவறை ஒத்துக்கொண்டதுடன் வாக்குமூலம் அளித்தார்.