விவாகரத்து செய்துவிட்டு புதிய காதலனை கரம் பிடிக்க மனைவி திட்டம்! கண்டுபிடித்த கணவன் செய்த வெறிச் செயல்!

தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு நபரை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பெண்ணை கணவன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளான்.


திண்டுக்கல் தாடிக் கொம்பு அடுத்துள்ள கோட்டூர் ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசுப் பேருந்து டிரைவராக உள்ளார். இவரது மனைவி சசிகலா. இருவருக்கும் 10 வயது வித்தியாசம். இந்த தம்பதிக்கு 14 வயதில் பூவிதா எனும் மகள் உள்ளார்.

கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு வேறு ஒரு நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாகியுள்ளது. இதனை அடுத்து கணவரை பிரிந்து சென்ற சசிகலா தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

மேலும் கணவர் செல்வராஜை விவாகரத்து செய்துவிட்டு தனது புதிய காதலனை திருமணம் செய்ய சசிகலா முடிவு செய்ததாக  கூறப்படுகிறது. இதனை அடுத்து திண்டுக்கல் குடும்ப நல கோர்ட்டில் சசிகலா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது. தனது மனைவி தன்னை விவாகரத்த செய்துவிட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்வதை செல்வராஜால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் நேற்று தாடிக் கொம்பு சந்தையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சசிகலாவை வழி மறித்துள்ளார் செல்வராஜ்.

மேலும் கையோடு கொண்டு சென்ற அரிவாளை கொண்டு சசிகலாவை சரமாரியாக வெட்டியுள்ளார் செல்வராஜ். இதனை பார்த்து அதிர்ந்த மகள் பூவிதா தாயை தந்தையிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த செல்வராஜ் என்ன  செய்கிறோம் என்பதையே மறந்துள்ளார்.

பெற்ற மகள் என்றும் பார்க்காமல் பூவிதாவையும் வெட்டியுள்ளார். சம்பவ இடத்திலேயே சசிகலா இறந்துவிட பூவிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். தப்பி ஓடிய செல்வராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன.