மனைவி உடல் அங்கங்களின் ஆபாச அசைவு..! டிக்டாக் வீடியோ..! வெறி ஏறிய கணவன் அரங்கேற்றிய பயங்கரம்!

டிக் டாக் செயலியே கதி என கிடந்த மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.


டிக் டாக் செயலியால் லைக்குகள் கிடைக்கிறதோ இல்லையோ அவ்வப்போது கொலைகள் தாரளமாக நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

தெலுங்கானா மாநிலத்தில் தையல் வேலை புரியும் பாசகாசிம் என்பவருக்கும் பாத்திமா என்பவருக்கும் திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. திருமணம் ஆன முதலே மனைவி தேவையில்லாமல் அதிகம் செலவு செய்வதாக கணவர் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் 2 மாதத்திற்கு முன்னர் ஊராட்சி அலுவலகம் ஒன்றில் பாத்திமாவுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை கிடைத்துள்ளது.

அங்கு வேலையை ஒழுங்காக செய்யாமல் தனது மொபைலில் டிக் டாக் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காமல் டிக் டாக்கில் வீடியோ போடுவதையே வேலையாக வைத்திருந்த பாத்திமா மீது கோபம் அடைந்தார் கணவர். இது குறித்து கடந்த 27ம் தேதி மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் கணவர்.

ஆனாலும் மனைவி ஏற்க மறுத்ததால் சப்பாத்தி கட்டையால் பாத்திமாவின் மண்டையை உடைத்தார் கணவர். பின்னர் பாத்திமா இறந்துவிட அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடியுள்ளார். ஆனால் போலீஸ் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பாத்திமாவை கணவர்தான் கொன்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தூக்குப்போட்டுக்கொண்டால் மண்டையில் எப்படி ரத்தம் வரும் என போலீசார் யோசிக்க மாட்டார்களா என்பது கூட தெரியாத குற்றவாளியாக இருக்கிறார் கணவர்.