தகாத உறவு! அந்தரங்க வாழ்க்கை! மனைவி கொலை! பாபநாசம் பட பாணியில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

திருவனந்தபுரம்: பாபநாசம் படப் பாணியில் கேரளாவில் மற்றும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கமல், கவுதமி நடித்து தமிழில் வெளியான பாபநாசம் படம், உண்மையில் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான திரிஷ்யம் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில், தனது மகளிடம் தவறாக நடக்க முயன்ற நபரை கொன்று, அவரது சடலத்தை கதாநாயகனின் குடும்பமே ஒன்று சேர்ந்து, மறைத்து வைத்து விடுவார்கள்.

கடைசி வரை அவர்கள்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க முடியாமல் போலீசார் தோற்றுவிடுவார்கள். இந்த பாணியில், திருவனந்தபுரத்தில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால், குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  

3 மாதங்களுக்கு முன்பாக, வித்யா என்ற பெண், கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். ஆனால், அவரை யார் கொன்றனர் என்ற விவரம் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், வித்யாவின் கணவர் பிரேம்குமாரை சந்தேகப்பட்டு விசாரித்தனர்.

அதில், அவர், சுனிதா என்ற பெண் உடன் கள்ளக்காதல் வைத்திருந்துள்ளார். இதன்பேரில், வித்யாவை, சுனிதாவுடன் சேர்ந்து கொன்றுவிட்டு, தடயங்களை அழித்துவிட்டு, நல்லவர்போல பிரேம் குமார் நடமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொல்லப்பட்ட மனைவியின் சடலத்தை, தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூர் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் புதைத்துவிட்டு, மனைவியை காணவில்லை எனக் கூறி பொய்யான போலீஸ் புகாரை பிரேம் குமார் அளித்திருக்கிறார். இதனை ஒருவழியாக, போலீசார் கண்டறிந்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.