நள்ளிரவில் நடு வீட்டில் தொங்கிய மனைவி சடலம்! விசாரணையில் கணவன் வெளியிட்ட பகீர் தகவல்! சென்னை அதிர்ச்சி!

வீட்டில் சமைக்க வில்லை என்பதற்காக காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் நேர்ந்துள்ளது.


சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வரும் ஜெயராஜ் என்பவர், இலக்கியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இலக்கியா வேளச்சேரி பகுதியில் இருக்கும் பீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். பணி முடித்துவிட்டு இரவு வீடு திரும்புவதற்கு 10 மணிக்கு மேல் ஆகும் என்பதால், பெரும்பாலான நேரத்தில் ஹோட்டலிலேயே கணவருக்கு உணவு வாங்கி வந்து வைத்துவிட்டு இலக்கியா உறங்கி விடுவார். 

ஏன் வீட்டில் சமைக்கவில்லை என ஜெயராஜ் மற்றும் இலக்கியா இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இம்மாதம் 1ஆம் தேதி திடீரென ஜெயராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்கையில், இலக்கியா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், போலீசார் விரைந்து வந்து இலக்கியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் இலக்கியாவின் கழுத்தில் காயம் ஏற்பட்டிருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.  

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ஜெயராஜை அழைத்து கடுமையாக விசாரித்ததில் வேறுவழியின்றி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். கொலை செய்துவிட்டு அதை மறைப்பதற்கு வழிதெரியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட முயற்சித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.