கோவை மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பலமுறை எச்சரித்தும் திருந்தாத மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரருடன் தகாத உறவில் இருந்த மனைவி! கண்டுபிடித்த கணவன் அரங்கேற்றிய பயங்கரம்! கோவை பயங்கரம்!
கோவை மாவட்டம் கோவிந்த நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும் கீதா என்பவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் அவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும் உள்ளார்.
அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மகன் படித்து வருகிறார். இந்நிலையில் கீதாவுக்கும் அவரது சகோதரர் முறை கொண்ட உறவினர் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்துள்ளது. அதனை அறிந்த முருகேசன் பலமுறை எச்சரித்தும் கீதா கேட்காமல் கள்ள உறவைத் தொடர்ந்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கீதா அருகில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு சென்று அங்கிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது முருகேசன் தனது மனைவி கீதாவை பார்க்க சென்றுள்ளார் இந்நிலையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தும் போது அந்த நபருடன் உண்டான உறவை நிறுத்திக் கொள்ளும்படி முருகேசன் கூறியுள்ளார்.
அப்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவரது மனைவி. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கீதாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் பலத்த காயத்துடன் கீதா கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அங்கு கூட்டம் கூடவே முருகேசன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முருகேசன் விஷம் குடித்துவிட்டு துடியலூர் அருகே உள்ள ராமநாதபுரம் அருகே ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.