விழுப்புரம் அருகே பெண் ஒருவர் கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீட்டில் ஆண் நண்பனுடன் நிர்வாணமாக இருந்த மனைவி..! கதவை திறந்து பார்த்த கணவனுக்கு நேரந்த கொடூரம்!
விழுப்புரம் அருகே வி.அரியலூர் கிராமத்தில் ராஜகுமரன், லதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. ராஜகுமரன் கார் ஓட்டுநராக இருக்கிறார். ராஜகுமரனின் நண்பர் ரஞ்சித் என்பவருக்கும் லதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வீட்டில் இல்லாதபோதல்லாம் ரஞ்சித்தை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார் லதா.
இதற்கிடையே இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை திடீரென கணவர் ஒருநாள் பார்த்துவிட்டார். இதனால் வேதனை அடைந்த ராஜகுமரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் இவர்கள் பிரிவதாக இல்லை. இதற்கிடையே வேலைக்காக வெளியூர் செல்வதாக ராஜகுமரன் புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது ரஞ்சித்திற்கு போன் செய்த லதா வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
வெளியூர் சென்ற கணவர் திடீரென திரும்பிவிட்டார். வீட்டில் இவர்கள் இருவரும் நிர்வாண கோலத்தில் அலங்கோலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தகராறில் ஈடுபட்ட ராஜகுமரனை 2 பேரும் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் லதா கணவரின் அண்ணன் முத்துக்குமரனுக்கு போன் செய்து கணவருக்கு என்னவென தெரியவில்லை மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
பிறகு மருத்துவர் வந்து பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த முத்துக்குமரன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜகுமரன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் லதாவும், ரஞ்சித்தும் சேர்ந்து கணவரை கொன்றதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்தனர்.