பெண் ஆசை! சயனைடு கொலை! சபலத்தால் சாய்ந்தவனுக்கு கருணை காட்டிய நீதிமன்றம்!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்தியர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் புனலூரை சேர்ந்த சேம் ஆபிரகாம் - சோபி தம்பதியின் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2015ம் ஆண்டு தனது கணவர் ஆபிரகாம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரழந்ததாக சோபி தெரிவித்ததை அடுத்து அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் என்ஜினியர் ஆபிரகாம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கவில்லை என்பதும் கள்ளக்காதலன் அருண் என்பவருடன் சேர்ந்து சோபி கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.

சோபி கேரளாவில் செவிலியர் படிப்பு படித்தபோது என்ஜினியரான அருணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலும் அருணுக்கு வேலை கிடைத்ததால் இருவருக்குமான முறையற்ற உறவு நீடித்துள்ளது. இந்த விவகாரம் சோபியின் கணவர் ஆபிரகாமுக்கு தெரியவர இவர்கள் உறவை கண்டித்துள்ளார். 

ஆனால் கணவரை கொன்றுவிட்டால் நாம் தொடர்ந்து உல்லாசமாக இருக்கலாம் என அருணுக்கு ஆசைவார்த்தை கூறிய சோபி ஆபிரகாம் சாப்பிடும் உணவில் சயனைடு கலந்து கொடுத்து அவரை பரலோகம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சோபிக்கு 22 ஆண்டுகளும், அருணுக்கு 27 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து மெல்போர்ன் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 

ஆனால் தன்மீது எந்த தவறும் இல்லையென்றும் தான் பலிகடா ஆக்கப்பட்டதாகவும் அருண் தொடர்ந்து நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து அவருக்கான தண்டனை மட்டும் 24 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

மனைவியின் கள்ளக்காதலைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் கணவர்கள் வாழ்கிறார்கள். கண்டிப்பவர்கள் சாகிறார்கள். சாதி, மதம், மொழி கிடையாது என்பது காதலுக்கு மட்டுமல்ல, கள்ளக்காதலுக்கும்தான் என்கிறார்கள் சோபி போன்றவர்கள்