மனைவியின் நடத்தையில் சந்தேகம்! ஆனால் கணவனால் மச்சினிச்சிக்கு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

மும்பையில் தன் விருப்பத்தை மீறி தனது மனைவி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்ற உறவுக்காரப் பெண் மீது ஆத்திரம் அடைந்த நபர் அந்தப் அந்தப் பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்றதையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


மும்பையின் சேவரி பகுதியை சேர்ந்தவர் எலராஜா ஹரிஜன். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு கடந்த 19ஆம் தேதி இரவு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை எழுப்பி தனக்கு சாப்பிட ஏதாவது செய்து தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அவருக்கு சமைத்துக் கொடுத்த அந்தப் பெண் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்த போது பின் பக்கமாக சென்ற அந்த நபர் கத்தியால் அந்தப்பெண்ணின் கழுத்தை அறுத்ததாகவும், அந்தப் பெண் உதவி கேட்டு அலறியதை அடுத்து அச்சம் அடைந்த அந்த நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

அக்கம்பக்கத்தினர் அந்தப் பெண்ணை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து அந்தப் பெண்ணை காப்பாற்றினார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த சனிக்கிழமை எலராஜாவை கைது செய்தனர். 

விசாரணையின்போது அந்தப் பெண் தனது மனைவியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதாகவும் அவ்வாறு அழைத்துச் செல்லக் கூடாது என  எச்சரித்ததையும் மீறியும் அவர் அழைத்துச்  சென்றதால் ஆத்திரத்தில் இருந்த தான் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் தனது மனைவிக்கு தவறான தொடர்பு இருப்பதாக அந்த நபர் சந்தேகப்பட்டதாகவும், அது தொடர்பான இடங்களுக்குத் தான் உறவுக்காரப் பெண் மனைவியை அழைத்து செல்வதாக அந்த நபர் கருதியதாகவும் கூறப்படுகிறது.