உன் மனைவியை நான் கூட்டிட்டுப் போறேன்..! கணவனிடம் கேட்ட முன்னாள் காதலன்! அப்புறம் நடந்த திடுக்

திருப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்த தன்மனைவியின் முன்னாள் காதலன், தனது மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்வதாக கூறியதால் ஆத்திரம் அடைந்த அப்பெண்ணின் கணவர் அந்த நபரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இச் சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை திருச்சுளை பகுதியை சேர்ந்தவர் கேசவமூர்த்தி 25, இவர் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் சொந்த ஊரில் இருக்கும் போது அதே பகுதியைச்சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் நெருங்கிப் பழகி உள்ளார் இந்நிலையில் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டாருக்கு தெரியவர அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை திருப்பூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் 32, என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள வெங்கமேடு பகுதியில் வீடு எடுத்து தங்கி அங்குள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கேசவமூர்த்தி விடுமுறையின் போது சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் தனது முன்னாள் காதலியை சந்திக்க திருப்பூர் வந்துள்ளார் .இதையடுத்து மூன்று மாத விடுமுறையில் வந்த கேசவமூர்த்தி திருப்பூரில் தங்கி பிரகாஷ் பணிபுரியும் அதே நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். மற்றும் இருவரும் வெகு நாட்களாக நண்பர்களாக பழகி உள்ளனர். 

இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் அளவிற்கு நட்பாக பழகி உள்ளனர். இந்நிலையில் ஒருநாள் மது அருந்தும்போது கேசவமூர்த்தி திடீரென உன் மனைவியை நான் அழைத்துக் கொண்டு செல்ல போகிறேன் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரம் பிரகாஷ் கேசவமூர்த்தியை எச்சரித்துள்ளார், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பாரில் இருந்த கத்தியை எடுத்து கேசவமூர்த்தி பலமாக குத்தியுள்ளார். இந்நிலையில் பலத்த காயமடைந்த கேசவமூர்த்தி ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார். இந்நிலையில் படுகாயமடைந்த கேசவமூர்த்தி அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.