இளம் மனைவியின் சடலத்தை 106 நாட்களாக பிரிட்ஜில் வைத்திருந்த கணவன்! பதற வைக்கும் காரணம்!

சீனாவில் மனைவியை கொன்று அதை மறைப்பதற்காக வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜில் சடலத்தை மறைத்து வைத்த கணவருக்கு ஹாங்காய் கோர்ட் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


சீனாவின் ஹாங்கோ பகுதியைச் சேர்ந்தவர் ஜூ சியாடோங்(30) இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.மற்றும் இவரது மனைவி யாங் லிப்பிங்(30) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர் அவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் அடிக்கடி பணம் குறித்தான சண்டைகள் அதிகமாக வருவதும்இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சியாடோங் தனது மனைவி லிப்பிங்ஐ தாக்கியுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை வீட்டில் உள்ள ஃப்ரீஸரில் மறைத்து வைத்துள்ளார். 

அருகில் இருந்தவர்கள் அவரது மனைவி எங்கே என்று கேட்ட போது அதற்கு வெளியூருக்கு சென்றுள்ளதாக மலுப்பியும் உள்ளார். தனது வீட்டின் பால்கனியில் ஃப்ரிட்ஜ் இருந்ததால் அருகில் உள்ளவர்கள் இதை எதற்காக இங்கே வைத்துள்ளீர்கள் என கேட்டபோது அதற்கு அவர் தனது செல்லப் பிராணிகளுக்கு உணவு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனைவியை கொன்றதை மறைப்பதற்காக அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்தும், தன் மனைவியின் செல்போனில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். அப்பெண்ணின் தாயின் பிறந்த நாள் வந்தபோது அவர்கள் இருவரையும் தாய் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது அதிர்ச்சி அடைந்த சியாடோங் தன் மனைவியை கொன்றதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் சுமார் 106 நாட்கள் மனைவியை பிரிட்ஜில் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.