திருமணமான கையோடு வெளிநாடு சென்ற கணவன்! ஊர் திரும்பிய போது குழந்தையோடு நின்ற மனைவி! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கணவனுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு 33, இவர் கலைவாணி 28 என்ற பெண்ணை காதலித்து காதலித்து வந்துள்ளனர்.இவர்களின் காதல் கலைவாணியின் பெற்றோருக்கு தெரியவர காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருமணம் முடித்த 5 மாதத்திலேயே பாபு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு குடிக்கு அடிமையாகியுள்ளார். இதையடுத்து இந்த பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தகராறு முற்றிய நிலையில் பாபு கலைவாணியை அடுத்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவர் இதன் காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வராமல் இருந்துள்ளார்.பிறகு கலைவாணி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்ற கலைவாணி கணவரின் வீட்டிற்கு திரும்பி வராமல் அங்கேயே இருந்துள்ளார்.

இதையடுத்து பல்வேறு முறை பாபு தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து தனது தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த பாபு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து கலைவாணிக்கு குழந்தை பிறந்து அவர் தனது தாய் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில் பாபு தற்போது வெளிநாட்டில் இருந்து வந்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தனது மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.இதையடுத்து அதை ஒப்புக்கொண்டு கலைவாணி பாபுவுடன் குடும்பம் நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து பாபு மது அருந்திவிட்டு கல்யாணியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நிலவியுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த பாபு கலைவாணியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த செய்தியை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கலைவாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் கொலைக்கு காரணமாக இருந்த அவரது கணவர் பாபுவை கைது செய்தனர்.இதையடுத்து பாபுவின் குற்றம் உறுதி செய்த பிறகு அவருக்கு தற்போது ஆயுள் தண்டனையும் ரூபாய் 5000 அவரது முன் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.