ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
60 வயது மனைவி நடத்தையில் சந்தேகம்! 65 வயதில் கணவன் அரங்கேற்றிய கொடூரம்!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கடுகுச் சந்தை சத்திரம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி 65, இவரது மனைவி அழகு வள்ளி 60, குருசாமி அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மாரீஸ்வரி என்ற மகளும் உள்ளார். தன் மகளுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் அவர் தனது கணவர் வீட்டில் வசித்து வருகிறார். எனவே குருசாமி மற்றும் அவரது மனைவி அழகு வழியாக இருவரும் தனியே ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
குருசாமிக்கு குடிப்பழக்கம் உள்ளதால் அடிக்கடி குடித்து விட்டு வந்து அழகு வலியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது வழக்கமாக இருந்து வந்துள்ளது .சிலநாட்கள் சென்ற நிலையில் தனது 65 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை குடித்துவிட்டு வந்து சண்டை போட்டுள்ளார்.
அதேபோல் இன்றும் குடித்து விட்டு வந்து தன் மனைவியிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குருசாமி வீட்டிலுள்ள அரிவாளை எடுத்து அழகுவள்ளியை பலமாக தாக்கியுள்ளார். இதனால் தலையில் படுகாயமடைந்த அழகுவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதை பார்த்தஅருகில் இருந்தவர்கள் உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குருசாமியை கைது செய்தனர். பின்னர் அழகுவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குருசாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.