மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் டிக்டாக் மோகத்தில் மூழ்கிய பெண் கொடூரமாக கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆண் நண்பர்களை தேடி ஓடிச் சென்று டிக்டாக்..! கணவனுக்கு தெரியாமல் அரங்கேற்றிய செயலால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம்!
அசோக், சுதா இருவரும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. அசோக்கிற்கு மதுபான பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கத்தால் குடும்பத்தை கவனிக்கத் தவறியதால் மனைவி சுதாவின் கவனம் டிக்டாக் பக்கம் திரும்பியது.
அதில் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் அவருக்கு நிறைய ஆண் நண்பர்கள் கிடைத்துள்ளது. ஆண் நண்பர்கள் அவ்வப்போது தரும் நயவஞ்சகத்துடன் தரும் ஆறுதலை நம்பி அவர்களுடன் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தைகளையும் கவனிக்காமல் டிக்டாக்கில் மூழ்கிய சுதாவை கண்டித்துள்ளார்
அசோக். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது. கணவனுடன் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதும் பின்னர் வருவதுமாக சுதா இருந்துள்ளார். இந்நிலையில் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் கணவர்.
இந்நிலையில்தான் திடீரென சுதா கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சுதாவை கணவர்தான் கொன்றிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் டிக்டாக்கில் பழகிய ஆண் நண்பர்களிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த வருடமும் சென்னையில் ஒரு பெண் டிக்டாக் மோகத்தில் அடிமையாகி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போனார். பின்னர் அவர் கைதான சம்பவம் அனைவருக்கும் தெரியும். சுதாவின் டிக்டாக் மோகத்தால் தற்போது தாயை இழந்த 2 குழந்தைகள் தந்தையின் ஆதரவும் இன்றி அநாதைகளாக தவிக்கின்றன.