உன் பொண்டாட்டி நடத்தை சரியில்லை! ஜோதிடன் கூறிய பகீர் தகவல்! ஆத்திரத்தில் கணவன் அரங்கேற்றிய பயங்கரம்!

நடத்தை சரியில்லை என்று ஜோதிடத்தை நம்பி மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவன்.


தென்காசி அருகே நடத்தை சரியில்லை என்று ஜோதிடர் சொன்னதை நம்பி மனைவியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரப்பை ஏற்படுத்தியதுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே, குலசேகரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் காளியம்மாள் தம்பதினர். புதிதாக வீடு கட்டுவது தொடர்பாக ஜோதிடரிடம் ஆலோசனை கேட்டபோது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், கணவன் ஜோதிடத்தை நம்பி, மனைவியை தேடி பருத்தி காட்டில் சென்றுள்ளார். அங்கு வேலை செய்து கொண்டிருந்த காளியம்மளை அரிவாளால் தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியதாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்த மாரியப்பன் அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காட்டில் காயங்களுடன் கிடந்த மாரியம்மாளை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜோதிடரிடத்தை நம்பிய அவர் அரிவாளால் காளியம்மாளை வெட்டிக்கொல்ல முயன்றதாகவும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரப்பை ஏற்படுத்துள்ளது.