ஈரோடு மாவட்டத்தில் மனைவியிடம் அத்துமீறிய நபரை கொடூரமாக கொலை செய்து கணவன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என் மனைவியை ஏண்டா நள்ளிரவில் எழுப்பி கூப்பிட்ட? இளைஞரை விரட்டி விரட்டி வெட்டிய கணவன்! ஈரோடு திகுதிகு!
ஈரோடு கோபி செட்டிப்பாளையம் அடுத்த அவ்வையார் பாளையத்தில் மணிமோகன் மற்றும் அவரது மனைவி செல்வி வசித்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்னர் 2 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் விஜயகுமார் செல்வியை எழுப்பியுள்ளார்
தூக்கத்தில் இருந்து எழுந்த செல்வி அதிர்ச்சி அடைந்து என்னவென்று கேட்க உல்லாசமாக இருக்கலாம் வா என கூறியதால் பயந்து போன செல்வி கூச்சல் எழுப்பினார். இதனால் பயந்து போன விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து பல இடங்களில் தேடியும் விஜயகுமார் கிடைக்கவில்லை.
இந் நிலையில் நேற்று அவ்வையார் பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விஜயகுமாரை பார்த்த செல்வியின் கணவர் மணிமோகன் மற்றும் 3 பேர் அவரை விரட்டினர். பின்னர் அவரை துரத்தி சென்று சின்னகுளம்பிரிவு மாரியம்மன் கோவில் பிடித்து ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது மட்டுமின்றி அவரது வாயில் விஷத்தையும் ஊற்றியுள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தை விஜயகுமாரின் கழுத்தில் ஏற்றினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விஜயகுமார் உடலை கைப்பற்றி கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடூர கொலையில் தலைமறைவாக உள்ள மணிமோகன் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.