இளம் மனைவிக்கு மாமியார் - கணவனால் ஏற்பட்ட பயங்கரம்! அதிர வைக்கும் சம்பவம்!

மும்பை கண்டிவாலியில் மருமகளை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய மாமியார் மற்றும் அப்பெண்ணின் கணவர், ஆகிய இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மும்பை கண்டிவாலா லால்ஜி படா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 22 வயது மதிக்கத்தக்க பாஹிம் இனாம் பஸ்திவாலா என்ற பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடி உள்ளனர்.

இந்நிலையில் போலீசார் விசாரணையில் அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பாஹிம் இனாம் பஸ்திவாலா 22 , மற்றும்இனாம் பஸ்திவாலா 29, இருவருக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் இருவரும் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இருவரும் அதிகமாக பேசிக் கொள்ளாத நிலையில் பாஹிம் அடிக்கடி யாருடனோ போனில் பேசி வந்துள்ளதாக தெரிகிறது, சந்தேகப்பட்ட அவரது கணவர் அவரை கடுமையாக திட்டியுள்ளார்.

இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே இருவருக்குமிடையே கடுமையான சண்டை ஏற்பட்டது அப்போது ஆத்திரத்தில் இனாம் அவரது கழுத்தை பிடித்து இறுக்கியுள்ளார் அப்போது மூச்சு விட முடியாமல் பாஹிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினரிடம் தன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டால் என அவரது கணவர் மற்றும் மாமியார் இருவரும் நம்பவைத்துள்ளனர். 

இந்நிலையில் அப்பெண்ணின் பெற்றோர்கள் தன் மகளின் சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது அவரது கழுத்து மற்றும் தலை பகுதியில் காயம் இருப்பதாகவும் யாரோ கடுமையாக தாக்கி உள்ளனர், எனவும் கண்டறிந்தனர் இதையடுத்து அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு நாள் முழுவதும் அவரது கணவரை போலீசார் விசாரித்தபோது விசாரணையில் கொலை செய்ததை அவரது கணவர் ஒப்புக்கொண்டுள்ளார் இந்நிலையில் அவர்கள் மீது கொலைக்குற்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.