கிரிக்கெட் பேட்டால் மனைவி தலையில் ஓங்கி ஒரே ஒரு அடி! கணவனின் அதிர வைத்த கொடூர செயல்!

மனைவியை பேட்டால் அடித்துக் கொலை செய்த கணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.


தெலுங்கானா மாநிலம் மெஹபூபாபாத் மாவட்டத்தில் அந்தத் தம்பதியின் வீடு உள்ளது. நேற்று இரவு அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்ட நிலையில் அந்த நபர் தனது மனைவியை பேட்டால் தலையில் அடித்ததோடு வயர் ஒன்றா கழுத்தை இறுக்கியும் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்த அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில் 30 வயதான அந்தப் பெண் 11 ஆண்டுகளுக்கு முன் தினக்கூலித் தொழிலாளியான அந்த நபரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டதும், அவர்களுக்கு ஒரு சிறுமி, இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. 

இதனிடையே கொல்லப்பட்ட் பெண்ணின் பெற்றொர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கள் மருமகன் தங்கள் மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இந்நிலையில் கொலை செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இந்த கொலையை கணவன் செய்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.