பிரிந்து சென்ற காதல் மனைவி! சமாதானம் செய்து அழைத்து வந்த கணவன்! பிறகு மாமியார் முன் அரங்கேறிய திகில் சம்பவம்!

திருப்பூர்: காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூரில் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் ரமேஷ்குமார் (35 வயது). இவர், பிரியா என்பவரை 12 ஆண்டுகளுக்கு முன், காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  ஒரு மகள், மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில், தொழில் நஷ்டம் காரணமாக, மன அழுத்தத்தில் இருந்து வந்த ரமேஷ், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்திருக்கிறார். 

இதில் அதிருப்தி அடைந்த பிரியா, தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். ஆனாலும் விடாத ரமேஷ்குமார், தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, மனைவியை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்.

ஒருகட்டத்தில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது பிரச்னையாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த ரமேஷ்குமார்,  கத்தியை எடுத்து, மனைவி பிரியாவின் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார்.

இதைக் கண்ட அவரது மாமியார் உள்ளிட்டோர் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த நபரை மடக்கி பிடித்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை பிடித்துக் கொடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.