கல்யாணம் ஆகி 5 வருடங்களாக குழந்தை இல்லை! விவகாரத்து கேட்ட மனைவியின் தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்ற கணவன்!

ஐதராபாத்: குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியின் தலையை வெட்டி காதல் கணவனே படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் பிரபுகுமார் (30 வயது). தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் இவர், தன்னுடன் பணிபுரிந்த மணி கிரண்டி என்ற பெண்ணை 5 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால், இருவருக்கும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை.

இதன்பேரில், இருவரும் அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்வதும், அதன்பேரில் காரசாரமாக சண்டையிட்டுக் கொள்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். 

அதுபற்றி விசாரணை நடந்த நிலையில், பிரபுகுமார் கிரண்டியை அடித்து துன்புறுத்துவதை வாடிக்கையாகச் செய்திருக்கிறார்.  இதுகுறித்து போலீசில் கிரண்டி புகார் அளிக்கவே, அவர்கள் அவரை கைது செய்தனர். இதனால், கடும ஆத்திரம் கொண்ட பிரபுகுமார், சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்தார். 

தனது காதல் மனைவியை கொலை செய்ய தீர்மானித்த பிரபுகுமார், நேற்று (ஆகஸ்ட் 11) அன்று ஆள் இல்லாத நேரம் பார்த்து, கிரண்டியின் வீட்டிற்குச் சென்று, அவரது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, தெருவில் நடந்து சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அச்சத்தில் உறைந்தனர்.

பின்னர் அருகில் உள்ள கால்வாயில் அந்த தலையை வீசிவிட்டு, போலீஸ் நிலையம் சென்று பிரபுகுமார் சரணடைந்தார். சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை கைது செய்தனர். தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக, கிரண்டி பலமுறை போலீசில் முறையிட்டும், போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்காததே இந்த கொலைக்கு காரணம், என கிரண்டியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.