கொழுந்தனை கவனிக்க மறுப்பு! மனைவி தலையில் சிலிண்டரை போட்ட விபரீத கணவன்!

கோவை அருகில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் கியாஸ் சிலிண்டரை மனைவி தலையில் தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை வேடப்பட்டியில்  வசித்து வரும் மாரிமுத்து  தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். அவரது மனைவி சுப்பாத்தாள் அந்த பகுதியில்  வெற்றிலை வியாபாரம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாரிமுத்து தனது மனநலம் பாதிக்கப்பட்ட  தம்பியை கவனித்துக்கொள்ளுமாறு சுப்பாத்தாளிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு மனைவி சுப்பாத்தாள் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கு இடையே அடிக்கடி  தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைய, ஒரு கட்டத்தில்  ஆத்திரமடைந்த மாரிமுத்து, மனைவி சுப்பாத்தாளின் தலையில் கியாஸ் சிலிண்டரை தூக்கிப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

மேலும் ஆத்திரத்தில் தவறு செய்ததை உணர்ந்த மாரிமுத்து தானும் நைலான் கயிற்றை மாட்டிக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து  தகவலறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.