மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்த கொடூர கணவன்! பதற வைக்கும் காரணம்!

லக்னோ: கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் துண்டு துண்டாக வெட்டி அரைத்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.


உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேய்லி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திர குமார் (35 வயது). இவரது மனைவி ஊர்மிளா (27 வயது). கர்ப்பிணியாக இருந்த ஊர்மிளாவை கடந்த ஜனவரி 4ம் தேதி முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில், ஊர்மிளாவின் குடும்பத்தினர் போலீசில் பல முறை முறையிட்டுள்ளனர்.

ஏற்கனவே 2 முறை பெண் குழந்தைகளை ஊர்மிளா பெற்றெடுத்ததால் அதிருப்தியில் இருந்த   ரவீந்திர குமார், இந்த முறையும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்ற ஆத்திரத்தில் ஊர்மிளாவை கொன்றிருக்கலாம் என சந்தேகம் கூறப்பட்டது. 

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், ரே பரேய்லியின் புறநகர்ப்பகுதியில் ஆளில்லாத பகுதியில், ஊர்மிளாவின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கிரைண்டரில் போட்டு அரைக்கப்பட்டு பிறகு, தீயிட்டு எரிக்கப்பட்ட நிலையில், குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, அந்த கொடூர கணவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.