சகோதரர் முறை நபருடன் தகாத உறவு? மனைவிக்கு சமூக சேவகரால் ஏற்பட்ட பயங்கரம்!

மும்பை கந்திவிலியில் 2-வது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தில் அவரைக் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கந்திவிலி 90 அடி சாலையைச் சேர்ந்த ஃபைகின்கான் என்ற பெண்ணுக்கு மூன்றரை வயது மகனும் ஒன்றரை வயது மகளும் உள்ளனர். இவர் தனது கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்ட தடங்களுடன்  தனது வீட்டில் இறந்து கிடந்தார். 

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது ஃபகின் கானின் கண்வர் சமூக சேவகரான இமாம் மனிஹர் எனவும், ஹிமாமுக்கு, ஃபகின் 2-வது மனைவி என்றும்தெரியவந்தது. தொடக்கத்தில் ஃபகின்கான் உடல் நலக் குறைவால் இறந்தாரா? தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

ஆனால் ஃபகின்கானுக்கு உடல் நலக்குற்றைவோ, திடிரென இறக்கும் வகையிலான கடும் நோய்களோ எதுவும் இல்லை என்று அவரது தாய்வீட்டினர் தெரிவித்தனர். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் கூறினர்.

 ஃபகின்கானின் கழுத்தில் இருந்த வெட்டு அடையாளங்களை சுட்டிக்காட்டிய அவர்கள், அவரை அவரது கணவன் கொன்றிருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்தனர். மேலும் ஃபகின்கானுக்கு இமாம் உணவு கொடுப்பதில்லை என்றும் தினமும் தாய் வீட்டிலிருந்துதான் உணவு சென்றதாகவும் அவர்கள் கூறினர். 

இந்நிலையில் உடற் கூறு அறிக்கையிலும் கொலை என உறுதிப்படுத்தபட்டது. இதையடுத்து இமாமை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது சகோதரர் முறை கொண்ட இளைஞருடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததாக இமாம் தெரிவித்தார்.