ஆசைக்கு இணங்க மறுத்த கர்ப்பிணி மனைவி! ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச் செயல்!

ஐதராபாத்தில் போதையில் இருந்த கணவன் கர்ப்பிணி மனைவியுடன் ஏற்பட்ட தகறாறு காரணமாக அவரை புடவையில் துக்கிட்டுக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.


 குடியைக் கெடுத்த குடியின் வரிசையில் அரங்கேறிய மற்றொரு கொலை இது. ஐதராபாத்தைச் சேர்ந்த 32   வயது நபர் விஜய். கடந்த 2013-ஆம் ஆண்டு விஜய்க்கும் கொல்லப்பட்ட பெண்ணுக்கும் திருமணம் ஆனது 5 ஆண்டுகளில் 2 பெண் குழந்தைகள் உள்ளன.

 

ஒரு ஆண் குழந்தை என ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் அடுத்த குழந்தையைப் பெற்றெடுக்க கருவுற்று குழந்தை பெறும் எந்திரத்தைப் போல் அவல நிலைக்குத் தள்ளப்பட்ட அபலை அந்தப் பெண்.

 

மேலும் மனைவி கர்ப்பமாகஇருந்த நிலையிலும் ஆசைக்கு இணங்குமாறு தொடர்ந்து கணவன் வலியுறுத்தி வந்துள்ளான். அவளை ஏற்கனவே உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கி வந்த கொடூரன் விஜயின் வெறிக்கு அது மட்டும் போதவில்லை அவளது உயிரும் தேவைப்பட்டது

 

கடந்த சனிக்கிழமை விஜய் குறிப்பிட்ட போதைப் பொருளைப் பயன்படுத்திவிட்டு போதையில் தளர் நடையிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவனால் சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்த மனைவி அவனது நிலையைக் கண்டு பொங்கி வெடித்தார்.

 

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் மனைவியை ஆசைக்கு இணங்குமாறு விஜய் வலியுறுத்தியுள்ளான். மது அருந்திவிட்டு தினமும் தன்னை சித்ரவதை செய்துகொண்டிருந்த கணவனை தட்டிக் கேட்டே ஆக வேண்டும் என்ற வேகத்தில் அந்தப் பெண் பேச, போதையில் இருந்த மிருகத்துக்கு ஆவேசம் தலைக்கு ஏறியட்து.

 

இதையடுத்து இருவருக்கும் காரசாரமான வாக்குவாதம் சூடேறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆசைக்கு இணங்காத மனைவியை அடித்து சித்ரவதையை தொடங்கினான் விஜய்.

 

இறுதியில் தனது மனைவியின் புடவை ஒன்றை எடுத்த அவன் அவரது கழுத்தை இறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்த மனைவியை அப்படியே தூக்கி தலைக்கு மேல் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தொங்கவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 

இதில் துடிதுடித்து மூச்சுத் திணறி அந்தப் பெண் உயிரிழந்தார்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் பெண்ணின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விஜய் மீது வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அவனை தேடி வருகின்றனர்.

 

தாயையும் பறி கொடுத்துவிட்டு தாயைக் கொன்ற குற்றத்தில் சிக்கிய தந்தையையும் இழந்து விட்டு அனாதரவாக நிற்கும் 5 வயதுக்குட்பட்ட 3 பிஞ்சுகளின் நிலைதான் வெகு பரிதாபமாக உள்ளது