மனைவியின் தலையை துண்டாக வெட்டி போலீஸ் ஸ்டேசன் எடுத்துச் சென்ற கணவன்! நண்பனுடன் நெருக்கமாக இருந்ததால் கொடூரம்!

புரி: மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்த காரணத்தால், அவரது தலையை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார்.


ஒடிசா மாநிலம், புரி மாவட்டத்தில் உள்ள ராய்பெருவான் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பீரா (40 வயது). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வந்த நிலையில், சில நாள் முன்பாக, விடுமுறைக்காக, சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது, தனது மனைவி அன்னப்பூர்ணா மீது திடீரென கணேஷ்க்கு, சந்தேகம் எழுந்துள்ளது. ஊரில் இல்லாத நாட்களில் யாருடனோ தனது மனைவி கள்ளக்காதல் செய்து வந்திருப்பதாக, நாளுக்கு நாள் கணேஷ்க்கு சந்தேகம் வலுத்துள்ளது.  

இதன்பேரில், திடீரென கடந்த ஞாயிறன்று வீட்டிற்கு சென்றுள்ளார் கணேஷ். அப்போது அவர் பார்த்த காட்சி அவர் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. கணவனின் நண்பருடன் அன்னபூர்ணா உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணேஷ் தனது மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். பின்னர், அந்த தலையை வெட்டி கையில் எடுத்துக் கொண்டு, நேரடியாக, உள்ளூர் போலீஸ் நிலையத்தில் கணேஷ் பீரா சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.