அடிக்கடி வெளியூர் சென்ற கணவன்! கார் ஓட்ட வீட்டுக்கு வந்த இளைஞருடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய பயங்கரம்! கதிகலங்க வைத்த சம்பவம்!

தொழிலதிபரான கணவனை கள்ளக் காதலனை கொண்டு போட்டுத்தள்ளிய மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது


சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்தவர்  தொழிலதிபர் உதயபாலன். இவர் அந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் தேதி தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் அவரது மனைவி உதய ரேகா விடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் கூறிய பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.

இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உதயபாலனுக்கும் உதயரேகாவுக்கும் திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை தெளிந்த நீரோட்டம் போல் தான் சென்று கொண்டிருந்தது உதய ரேகாவுக்கு கால் டாக்ஸி ஓட்டுனர் ஆன பிரபாகரன் அறிமுகம் கிட்டும்வரை.

உதயபாலன் வெளியூருக்குச் செல்லும்போது உதயரேகா பிரபாகரனின் கால் டாக்ஸியில் தான் வெளியிடங்களுக்குச் செல்வார் அது தொடர்ந்த நிலையில் இருவருக்குமான பழக்கம் நெருக்கம் அடைந்து தவறான உறவாக மாறியது.

பிரபாகரன் தன் குடும்ப வறுமையைப் போக்கிக் கொள்ள உதய ரேகா விடம் பணம் பெறுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது உறவு உதய பாலனுக்கு தெரியவந்த நிலையில் அவர் உதய ரேகாவை கண்டித்தார்.

இதுகுறித்து உதய ரேகா பிரபாகரனிடம் தெரிவித்தபோது உதயபாலனை கொல்லும் திட்டத்தை பிரபாகரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதலில் மறுத்த உதய ரேகா பின்னர் எது வேண்டுமானாலும் செய்துகொள் என்று கூறிவிட்டு தனது மூன்று குழந்தைகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

உதய பாலன் வீட்டில் தனியாக இருந்ததை பயன்படுத்திக் கொண்டு பிரபாகரன் அவரை கொலை செய்ததாகவும் கொள்ளைக்காக கொலை நடந்தது போல் காட்ட உதய பாலன் அணிந்திருந்த நகைகளையும் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு பிரபாகரன் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் அனைத்தும் அம்பலமான இருவரும் சிக்கினார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த காலத்தில் பிரபாகரன் மரணம் அடைந்த நிலையில் உதய ரேகாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.