முதல் கணவனுக்கு கல்தா! காதலனுடன் சேர்ந்து 2வது கணவன் கொலை! நாமக்கல் செல்வி அரங்கேற்றிய பகீர் சம்பவம்!

நாமக்கல் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு பாலியல் சித்ரவதை செய்துவந்த கள்ளக்காதலன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் பெண்.


செல்வி என்பவர் முதல் கணவனை இழந்த பிறகு தன்னுடைய 2 குழந்தைகளுடன் 2வதாக வெங்கடேசன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். வெங்கடேசன் ஒழுங்காக குடித்தனம் நடத்தாமல் குடிபோதைக்கு அடிமையாகி நாள்தோறும் செல்வியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையே இந்த பிரச்சனை தெரிந்து கொண்டு ஆறுதலாக பேசிய பெருமாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது செல்விக்கு. கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்வதாக செல்வி, கள்ளக் காதலன் பெருமாளிடம் சொல்ல அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். பின்னர் வெங்கடேசுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கிக் கொடுத்து அழைத்து சென்று காவிரி ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் பெருமாள். 

பின்னர் தனிமையில் இருந்த செல்வியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான செல்வி குடிகார கணவரே பரவாயில்லை. இதுபோன்ற செக்ஸ் பைத்தியத்திடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறோமே என முடிவு செய்து காவல்துறையை நாடினார்.

அங்கு சென்று கணவர் வெங்கடேசுக்கு மதுபானம் கொடுத்து பெருமாள்தான் ஆற்றில் தள்ளி கொன்றதாக கூறி, அந்த குற்றத்துக்கு தானும் உடந்தை என்பதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து பெருமாளை கைது செய்த போலீசார் ஆற்றில் வீசப்பட்ட வெங்கடேசனின் உடலை தேடி வருகின்றனர்.