கணவன் கேட்க கூடாததை கேட்டதால் பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தாய் எடுத்த முடிவு அனைவரையும் அதிர வைத்துள்ளது.
கேட்க கூடாததை கேட்ட கணவன்! குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு இளம் மனைவி செய்த விபரீத செயல்!

போடியைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவர் தனது கணவர் பல்லவராஜன் என்பவர் உடனான கருத்து வேறுபாடு காரணமாக 15 மாத பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இருவரையும் சமாதானம் செய்து சேர்த்து வைக்க தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வந்தன.
ஆனால் பிரியங்காவுடன் சேர்ந்து வாழ கணவன் பல்லவராஜன் மறுத்துள்ளார். இதனால் ஏற்கனவே பிரியங்கா வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் பிரியங்காவுக்கு பல்லவராஜன் திடீரென விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக தனக்கு விவாகரத்து வேண்டும் என்று அதில் பல்லவராஜன் கூறியுள்ளார். இதுதொடர்பாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற பிரியங்கா, தனது மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்தார்.
இதில் குழந்தை பரிதாபமாக உயிரிந்து விட, பிரியங்காவை அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்தத்னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.