மனைவியை படுக்கையில் திருப்திப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 9 விஷயங்கள்..! என்னென்ன தெரியுமா?

உங்கள் மனைவி எப்போதுமே உங்களிடம் கேள்வி கேட்டு சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறாரா? அவர்களுக்கு என்ன செய்தாலும் திருப்திப்டுத்த முடியவில்லையா? 9 விஷயங்கள் போதும். மனைவி உங்களிடம் பொட்டிப் பாம்பாய் அடங்கிவிடுவார்.


இப்போதெல்லாம் பெண்கள் பழைய தலைமுறை போல் கிடையாது. அல்வாவுக்கும், மல்லிகைப் பூவுக்கும் மயங்க. அவர்கள் உங்களிடம் மயங்க வேறு சில விஷயங்களை ஆண்கள் செய்ய வேண்டும். 

தினமும் காலையிலும், மாலையிலும், இரவிலும் மனைவிக்கு குட்மார்னிங், குட்ஈவினிங், குட்நைட் என வாழ்த்துங்கள். இது அவர்களை நீங்கள் மறவாமல் இருக்கிறீர்கள் என கருதுவார்கள். இது பெண்களை ஸ்பெஷலாக உணர வைக்கிறது.  

உங்கள் மனைவி அல்லது துணை உங்களுக்காக செய்யும் சின்ன, சின்ன விஷயத்திற்கும் பாராட்டுங்கள். பாராட்டாமல் இருந்தாலும் குறை கூறுவதை தவிர்க்கலாம். பாராட்டு தெரிவிக்கும்போது, அதனுடன் சின்ன பரிசும் கொடுத்தீர்கள் எனில், மேலும் உங்கள் மீதுஅன்பு அதிகரிக்கும்.  

பெண்கள் நோண்டி நோண்டி உங்களிடம் கேள்வி கேட்பது சந்தேகமோ, பொறாமையோ அல்ல. உங்கள் மீது உள்ள காதலால் எங்கே தவறாக ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற பயம். அதனால் மனைவியிடம் பொய் பேச வேண்டாம்.

பெண்கள் எப்போதும் தங்கள் காதலர், கணவருடன் இருக்கும் படத்தை முகப்பு படமாக வைக்க விரும்புவார்கள். இப்படியாக வைப்பதன் மூலம் வேறு பெண்கள் தங்கள் துணையுடன் நெருங்கி பழகுவதை தவிர்க்க முடியும் என்று கருதுகிறார்கள்.  

பெண்களை கவர, அவர்களுக்கு பிடித்த விஷயத்தை, அவர்கள் எதிர்பாராத நேரத்தில் செய்து அசத்தி ஆச்சரியப்படுத்தினால் போதும். அவர்கள் உங்களை விரும்ப ஆரம்பித்துவிடுவார்கள். ஏதாவது விஷயங்களில் உங்கள் பக்கம் தான் என்றால் தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். சண்டைகள் முடிவடையாமல் தொடர்வதற்கு காரணம் மன்னிப்பு யார் கேட்பது என்ற ஈகோவால் தான்.